அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
ஒரு பிரச்சனை முடிந்து இன்னொரு போனால் நல்லா இருக்கும், ஆனால் ஒரு பிரச்சனை முடிவதற்குள் இன்னொன்று என பிரச்சனைகளாகவே இருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
குணசேகரன் ஈஸ்வரியை வைத்து போட்ட வழக்கில் தப்பிக்க வேண்டும் என குடும்பத்தில் நல்லவர் போல் நடித்து வருகிறார். எல்லாவற்றையும் மறந்து போன ஈஸ்வரியிடம் வீட்டுப் பொறுப்பு, தொழில் பொறுப்பு என எல்லாவற்றையும் கொடுத்து நல்லவர் போல் தன்னை காட்டிக்கொண்டு வருகிறார்.
குணசேகரன் மாற்றம் நல்லது தானே அதை ஏற்றுக்கொள்வோம் என்ற எண்ணத்தில் ஈஸ்வரி உள்ளார், அவரது எண்ணம் ஜனனிக்கு கடும் கோபத்தை கொடுத்து வருகிறது.
புரொமோ
அப்பத்தா வீட்டிற்கு வர ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா என அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள், அதேசமயம் ஈஸ்வரியிடம் அவர் ஏதாவது கூறிவிட போகிறார் என்றும் பயந்தார்கள்.
அவர்களின் பயத்தை தாண்டி குணசேகரனுக்கு தான் அதிக பயமே. இன்றைய எபிசோட் புரொமோவில், அப்பத்தா என் வீட்டிற்கு வந்தார், இப்போது நல்லா தானே குடும்பம் இருக்கிறது என விசாலாட்சியிடம் கூறி கோபப்படுகிறார் குணசேகரன்.
இன்னொரு பக்கம் ஈஸ்வரியிடம் அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு உனக்கு ஒரு குட் நியூஸ், சொல்லிடலாமா ஜனனி என அப்பத்தா கேட்கிறார், அவரும் சரி என்கிறார். அப்படி என்ன குட் நியூஸ் என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.






