ஆடுகளம் சீரியலில் இருந்து வெளியேறிய டெல்னா டேவிஸ் தொடருக்காக வாங்கிய சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

டெல்னா டேவிஸ்
தமிழ் மற்றும் மலையாள தொடர்களில் நடித்து மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை டெல்னா டேவிஸ்.
பரத நாட்டிய கலைஞரான இவர் 2015ம் ஆண்டு யூ டூ புரூட்டஸ் மூலம் அறிமுகமானார், அதன்பின் ஹேப்பி வெட்டிங் மற்றும் குரங்கு பொம்மை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் முதன்முறையாக நடித்த சீரியல் தான் அன்பே வா, சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய ஒரு தொடர். பல எபிசோடுகள் ஒளிபரப்பாகிய இந்த சீரியல் 4 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி 1000 எபிசோடுகளை தாண்டி ஓடியது.
ஆடுகளம்
அன்பே வா சீரியலை முடித்த கையோடு சிறிய கேப் எடுத்த டெல்னா டேவிஸ் அடுத்து சன் டிவியிலேயே புதிய தொடர் கமிட்டானார். ஆடுகளம் என்ற சீரியலில் கமிட்டான டெல்னா சத்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பிரைம் டைமில் ஓடிய இந்த சீரியல் இப்போது மதிய நேரத்தில் மாறிவிட்டது. இதனால் நடிகை டெல்னா டேவிஸ் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் நடிகை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
இந்த ஆடுகளம் சீரியலுக்காக நடிகை டெல்னா டேவிஸ் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.






