Main Vaapas Aaunga: திரை விமர்சனம்

Main Vaapas Aaunga: திரை விமர்சனம்


பாலிவுட்டில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இம்தியாஸ் அலி இயக்கியுள்ள Main Vaapas Aaunga திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.

Main Vaapas Aaunga: திரை விமர்சனம் | Main Vaapas Aaunga Movie Review

கதைக்களம்



95 வயது முதியவரான இஷார் சிங் (நஸீருதீன் ஷா) லாகூரில் தனக்கு முடிக்க வேண்டிய வேலை ஒன்று பாக்கி இருக்கிறது என்று கூறி அடம்பிடிக்கிறார்.



ஆனால், இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்து விட்டன என்பதை பின்னர் உணரும் அவர் படுத்த படுக்கையாகிறார்.

Main Vaapas Aaunga: திரை விமர்சனம் | Main Vaapas Aaunga Movie Review



இதனைக் கேட்டு லண்டனில் இருந்து வரும் அவரது நிர்வைர் கிரேவல், தாத்தாவிற்கு ஏதோ ஒரு கடமை இருக்கிறது அதனை நிறைவேற்ற வேண்டும் என்கிறார். குடும்பத்தினரோ அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் நீ கேள்வி கேட்டு அவரை துன்புறுத்தாதே என்கிறார்கள்.



என்றாலும், தாத்தாவின் காதல் கதையை கேட்கும் நிர்வைர், அவர் கூறும் சந்கேத உவமைகளை புரிந்துகொள்ள முற்படுகிறார்.

இறுதியில் அவர் எப்படி தாத்தா தனது கடைசி வேலையை முடிக்க உதவினார் என்பதே மீதிக்கதை.

Main Vaapas Aaunga: திரை விமர்சனம் | Main Vaapas Aaunga Movie Review

படம் பற்றிய அலசல்



பாலிவுட் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குநர்களில் ஒருவர் இம்தியாஸ் அலி.

அவர் தற்போது பஞ்சாப் இரண்டாக பிரிந்த கதையை திரைப்படமாக கொடுத்துள்ளார்.

நான் லீனியர் திரைக்கதை நகர்ந்தாலும், முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது.

என்றாலும் இரண்டாம் பாதியில் வரும் சம்பவங்கள் நம்மை மிரள வைக்கும்.

குறிப்பாக, சீக்கியர்களுக்கு நடந்த கொடுமைகளை இயக்குநர் காட்டிய விதம் நம்மை அதிர்ச்சியில் உள்ளாக்கும்.

Main Vaapas Aaunga: திரை விமர்சனம் | Main Vaapas Aaunga Movie Review

காதல் காட்சிகளில் பெரிதாக அழுத்தம் இல்லை என்றாலும், அந்த காலகட்டத்திற்கு நம்மை கொண்டு சென்றது சிறப்பாக இருக்கும்.

தில்ஜித்திற்கு பெரிதாக நடிக்க வேலை இல்லை என்றாலும், தன் கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக செய்திருப்பார்.



ஜியா கதாபாத்திரத்திற்கு ஷர்வாரி சரியான தேர்வு. அளவான நடிப்பதை தந்திருப்பார். 75 வயதில் தேர்ந்த நடிப்பை நஸீருதீன் ஷா கொடுத்துள்ளார்.

இஷாராக வேதாந்த் ரெய்னா அழகாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். அதேபோல் பிற நடிகர்களும் யதார்த்த நடிப்பை தந்துள்ளனர்.

Main Vaapas Aaunga: திரை விமர்சனம் | Main Vaapas Aaunga Movie Review

பிளாஷ்பேக் காட்சிகள் கண்டிப்பாக நம் மனதை உருக்கும். கிளைமேக்ஸ் ஆச்சரியம் கலந்த ஆறுதலாக முடிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய தூண். சில்வெஸ்டர் ஃபோன்செகாவின் ஒளிப்பதிவு, ஆர்த்தி பஜாஜின் எடிட்டிங் சிறப்பு.

க்ளாப்ஸ்



கதை



திரைக்கதை



பிளாஷ்பேக் காட்சிகள்



கிளைமேக்ஸ்



இசை



பல்ப்ஸ்



முதல் பாதி சற்று மெதுவாக நகர்வது



மொத்தத்தில் இந்த Main Vaapas Aaunga இந்தியில் ஒரு மதராசப்பட்டினம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். 

Main Vaapas Aaunga: திரை விமர்சனம் | Main Vaapas Aaunga Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *