நெல்சன் எனக்கு ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுங்க..: லெஜெண்ட் சரவணன்

நெல்சன் எனக்கு ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுங்க..: லெஜெண்ட் சரவணன்


லெஜெண்ட் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனவர் லெஜெண்ட் சரவணன். அவர் தற்போது அவரது இரண்டாவது படமான லீடர் படத்தில் நடித்து வருகிறார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் அந்த படம் உருவாகி இருக்கிறது. தற்போது சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்து இருக்கும் நிலையில் வரும் ஏப்ரல் 9ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

நெல்சன் எனக்கு ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுங்க..: லெஜெண்ட் சரவணன் | Legend Saravanan Next Film Triple Role

நெல்சன்

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கும் லெஜெண்ட் சரவணன் தனக்கு பிடித்த இயக்குனர் நெல்சன் தான் என்றும், அவரை இன்னும் 5 வருடங்களுக்கு பிடிக்க முடியாது எனவும் கூறி இருக்கிறார்.

”அதனால் ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுங்க நெல்சன், இரண்டு மூன்று நாள் ஷூட்டிங் இருந்தாலும் சரி, பண்ணிடலாம்” என லெஜெண்ட் சரவணன் கேட்டு இருக்கிறார். 

மேலும் தனது மூன்றாவது படத்தில் மூன்று ரோல்களில் நடிக்க போவதாகவும், அந்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது எனவும் கூறியுள்ளார் லெஜெண்ட்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *