தனது தம்பிகளால் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிய குணசேகரன்… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன், ஒரு புரியாத புதிராகவே கதையில் கொண்டு செல்கிறார்கள் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் குழுவினர்.
எப்போது ஒரு பிளான் போடுகிறார், ஒரு சில சமயம் எந்த விஷயத்தை வைத்து காய் நகர்த்துகிறார், அவருக்கு பின்னால் என்ன ரகசியம் இருக்கிறது என பல கேள்விகள் உள்ளன. தொடரில் எப்போது பார்த்தாலும் யோசிப்பது போலவே காட்டுகிறார்கள், ஆனால் ஏதோ ஒன்று செய்துவிடுகிறார்.
இப்போது தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என யோசிக்கும் குணசேகரன் தனது தம்பிகள் கதிர்-ஞானம் மீது மொத்த சொத்தையும் எழுதி வைத்துள்ளார்.
புரொமோ
நந்தினி மற்றும் ரேணுகா இதே டிராமா காலம் காலமாக நடக்கிறது, எத்தனை முறை தான் இப்படியே நாடகம் போடுவார். இதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள் இதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என கதிர்-ஞானத்திடம் கூறுகிறார்கள்.
அவர்கள் வழக்கம் போல் அண்ணனுக்கு பேசிவிட்டு செல்கிறார்கள். இப்போது வந்துள்ள ஸ்பெஷல் புரொமோவில், கதிர்-ஞானம் சொத்தை வாங்க தயங்க நீங்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் நான் இந்த வீட்டைவிட்டு கிளம்புகிறேன் என வெளியே வருகிறார்.
அவரை கெஞ்சியபடியே தம்பிகள் இருக்கின்றனர். ஆனால் ஜனனி, குணசேகரன் இந்த அளவிற்கு சொத்தில் ஒரு பிளான் போடுகிறார் என்றால் அதற்கு பின்னால் ஏதோ இருக்கிறது என யோசிக்கிறார்.






