இதுவாவது நிஜமா? உதவி கேட்டவருக்கு உடனே ரூ.50 ஆயிரம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ், தான் பணியாற்றும் படங்கள் பற்றிய அப்டேட் கொடுப்பது மட்டுமின்றி ரசிகர்களின் கேள்விகளுக்கும் அடிக்கடி பதில் அளிக்கிறார்.
ரூ.50 ஆயிரம் உதவி
கடந்த வருடம் X தளத்தில் அம்மா இறுதி சடங்கு என சொல்லி உதவி கேட்ட ஒரு நபருக்கு ஜி.வி உடனே 20 ஆயிரம் ரூபாய் ஜிபே-வில் அனுப்பினார். ஆனால் அந்த பதிவு போலியானது, போட்டோ பழைய போட்டோ என ரசிகர்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்தபோது இணையத்தில் எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள்.
இந்நிலையில் தற்போது ஆபரேஷனுக்கு பணம் இல்லை என சொல்லி X தளத்தில் ஒரு நபர் உதவி கேட்ட நிலையில், அவருக்கு உடனே 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
“எனது சிறிய உதவி. இது நிஜமான தேவை என நம்புகிறேன்” என ஜி.வி பதிவிட்டு இருக்கிறார்.
Best of luck a small help from my side . Hope it’s authentic pic.twitter.com/9SYOjM2ohk
— G.V.Prakash Kumar (@gvprakash) June 16, 2026






