அடி வாங்கியும் நிலாவிற்கு ராகவ் அனுப்பிய மெசேஜ், சோழன் என்ன செய்தார் தெரியுமா?.. அய்யனார் துணை

அடி வாங்கியும் நிலாவிற்கு ராகவ் அனுப்பிய மெசேஜ், சோழன் என்ன செய்தார் தெரியுமா?.. அய்யனார் துணை


அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் அய்யனார் துணை. 4 சகோதர்களின் வாழ்க்கை கதையாக தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற சீரியல்கள் போல் கதை இல்லாமல் இழுப்பது, ஒரு பிரச்சனையை ஒரு மாதத்திற்கு மேல் இழுப்பது போன்று சீரியல்களுக்கு உரியதான விஷயங்கள் பல இதில் இல்லை.

அட செம கதையாக உள்ளதே என ரசிகர்கள் ரசித்தும் பார்க்கும் அளவிற்கு கதை இதுவரை உள்ளது.

அடி வாங்கியும் நிலாவிற்கு ராகவ் அனுப்பிய மெசேஜ், சோழன் என்ன செய்தார் தெரியுமா?.. அய்யனார் துணை | Ayyanar Thunai Serial Feb 24 Episode Storyline

எபிசோட்

இன்றைய எபிசோடில் பொங்கல் கொண்டாட்டத்தில் புகைப்படங்கள் எடுக்கும் காட்சிகள் இன்று இடம்பெற்றன. 

வானதி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தனது வீட்டில் திருமணத்திற்கு ஓப்புக்கொண்ட விஷயத்தை கூறுகிறார். அனைவரும் சந்தோஷப்பட பாண்டி ஏதோ ஒரு யோசனையிலேயே உள்ளார், அதை நிலாவும் கவனிக்கிறார்.

பின் நிலா-சோழன் இருவரும் சேர்ந்து சேரன்-சந்தாவை புகைப்படங்கள் எடுக்கிறார்கள், அதைப்பார்த்து வானதி பொறாமை கொண்டு அவரையும் புகைப்படம் எடுக்க கேட்கிறார்.

அடி வாங்கியும் நிலாவிற்கு ராகவ் அனுப்பிய மெசேஜ், சோழன் என்ன செய்தார் தெரியுமா?.. அய்யனார் துணை | Ayyanar Thunai Serial Feb 24 Episode Storyline

அந்த காட்சிகள் அப்படியே செல்ல நிலா-சோழன் வீட்டின் வெளியே போட்டோக்கள் எடுப்பதில் பிஸியாகிறார்கள். அந்த நேரம் ராகவ், நிலாவிற்கு பொங்கல் வாழ்த்து கூறியதோடு அடுத்து வருடம் நாம் சேர்ந்து பொங்கல் கொண்டாடலாம் என்கிறார்.

அதைக்கேட்ட சோழன் கோபத்தில் நிலாவிற்கு தெரியாமல் அசிங்கமாக பதில் கொடுக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *