பேசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகும் ‘ராவடி’ படத்தின் மிரட்டலான டீசர்..

மலையாளத்தில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் பேசில் ஜோசப். இவர் சமீபத்தில் வெளிவந்த பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தமிழில் நடிக்கும் படம்தான் ராவடி.
சிறை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான எல்.கே. அக்ஷய் குமார் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதைக்களத்தில் இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் வடிவேல் உருவாக்கியிருக்கிறார் என்பது இந்த மிரட்டலான டீசரை பார்க்கும்போது தெரிகிறது. இதோ அந்த டீசர், நீங்களே பாருங்க:






