பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தவெக உறுப்பினர்… பலருக்கு தெரியாத தகவல்!

பிக் பாஸ் சீசன் 9
பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். இதில், 10 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை, 9 பெண் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
அதில், நந்தினி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அதை தொடர்ந்து, மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி முதல் வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.
தவெக உறுப்பினர்!
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவெக உறுப்பினர் ஒருவர் கலந்துகொண்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் வேறுயாருமில்லை, சுபிக்ஷா தான். கடைக்கோடியில் எளிய மீனவ குடும்பதிலிருந்து எந்தவித பின்புலமும் இன்றி கடின உழைப்பால் இன்று பிக்பாஸ் போட்டியாளராக கலக்கி வரும் சுபிக்ஷா தவெக உறுப்பினர்.