ஏஐ தொழில்நுட்பம் நல்லதா? லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்.. ரசிகர்கள் ஷாக்!

ஏஐ தொழில்நுட்பம் நல்லதா? லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்.. ரசிகர்கள் ஷாக்!


லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படம் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.

கடைசியாக இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ஏஐ தொழில்நுட்பம் நல்லதா? லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்.. ரசிகர்கள் ஷாக்! | Lokesh Open Talk About Ai Technology

ரசிகர்கள் ஷாக்! 

இந்நிலையில், மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” படம் பார்த்து தான் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது என்னை பொருத்தவரை சரியானது இல்லை. ஒரு சினிமா நம்மை இன்ப்ளூயன்ஸ் செய்தால் நாம் வளர்ந்த விதம் தவறாகிவிடும்.

சினிமா துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருக்காது. ஆனால் உதவி இருக்கும். ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

தொழில்நுட்பத்தை நாம் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பது நம்முடைய கையில்தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

ஏஐ தொழில்நுட்பம் நல்லதா? லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்.. ரசிகர்கள் ஷாக்! | Lokesh Open Talk About Ai Technology


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *