ஜெயிலர் 2 படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்.. தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி!!

ஜெயிலர் 2 படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்.. தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி!!


ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் மாதம் வெளிவரவிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஜெயிலர்


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், ஜாக்கி ஷரோப், மிர்னா, வசந்த் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் ரூ. 625 கோடி வரை வசூல் செய்து தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக மாறியது.

ஜெயிலர் 2 படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்.. தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி!! | Jailer 2 Movie Release Date Change


ஜெயிலர் 2


தமிழ் சினிமாவிற்கு இவ்வளவு பெரிய வெற்றியை தேடி தந்த ஜெயிலர் திரைப்படத்திற்கு இரண்டாம் பாகம் வேண்டும் என ரசிகர்கள் கேட்க, அனைவரும் எதிர்பார்த்த ஜெயிலர் 2 அறிவிப்பு மாஸாக வெளிவந்தது. இதன்பின் படப்பிடிப்பு அமோகமாக நடைபெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் ஒன்று உலா வருகிறது.

ஜெயிலர் 2 படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்.. தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி!! | Jailer 2 Movie Release Date Change


ரிலீஸ் தேதி மாற்றம்


ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேதியில் இப்படம் வெளிவராது என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலர் 2 படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்.. தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி!! | Jailer 2 Movie Release Date Change

படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிய காலதாமதம் ஆவதால், இப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 5-ஆம் தேதிக்கு தள்ளிவைக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது உண்மையான தகவலாக இருக்கும்பட்சத்தில், விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *