2 நடிகர் கைதானதும் இப்படி பேசுவீங்களா.. நடிகர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு காட்டமான பேச்சு

2 நடிகர் கைதானதும் இப்படி பேசுவீங்களா.. நடிகர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு காட்டமான பேச்சு


போதைப் பொருள் வழக்கில் சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு drugs சப்ளை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

2 நடிகர் கைதானதும் இப்படி பேசுவீங்களா.. நடிகர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு காட்டமான பேச்சு | Khushbu Sundar About Actors Drugs Case

குஷ்பு காட்டம்

இந்நிலையில் சினிமா துறையில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருக்கிறதே என நடிகை குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு அவர் காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார்.

“சும்மா எல்லாத்தையும் பூத கண்ணாடி வெச்சி பாக்காதீங்க. 3000 கிலோ போதை பொருள் சிக்கினால் அதை எல்லாமே சினிமா துறையினர் சம்மந்தப்பட்டது என சொல்ல முடியாது.”

“சினிமாவில் 2 பேர் கைதானதும் உடனே ‘சினிமாவில் போதைப்பொருள் அதிகமாயிடுச்சு’ என சொல்வீர்களா. நீங்க எத்தனை பேரை பாத்தீங்க.”

“சினிமா நடிகர்களும் மனிதர்கள் தான். சினிமாவில் இப்படி நடந்தால், ஒரு விவாகரத்து நடந்தால் உடனே பூத கண்ணாடி வெச்சி பாக்குறீங்க. பிரச்னையை தீர்க்க பாருங்க.. அதை பெருசாக்காதீங்க.”

“ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமை ஆனால், ஏன் ஆகிறார் என்று தான் பார்க்க வேண்டும். ஒருத்தர் ரெண்டு பேர் கைதானதும் வந்து இப்படி கேள்வி கேக்காதீங்க” என குஷ்பு காட்டமாக பேசி இருக்கிறார். 

2 நடிகர் கைதானதும் இப்படி பேசுவீங்களா.. நடிகர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு காட்டமான பேச்சு | Khushbu Sundar About Actors Drugs Case


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *