முதல் முறை வாடகை வீட்டில் இருக்கிறேன்.. ரவி மோகன் மேடையில் உருக்கம்

முதல் முறை வாடகை வீட்டில் இருக்கிறேன்.. ரவி மோகன் மேடையில் உருக்கம்


நடிகர் ஜெயம் ரவி அவரது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்ட நிலையில் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார்.

தற்போது ஆர்த்தியை பிரிந்துவிட்ட நிலையில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. மறுபுறம் அவரது தோழி கெனிஷா சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றை ரிலீஸ் செய்திருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தற்காக சினிமா துறையினருக்கு இருவரும் ஜோடியாக பார்ட்டி கொடுத்தனர்.

வாடகை வீடு

இந்நிலையில் ரவி மோகன் நேற்று 3BHK படத்தின் விழாவில் பேசும்போது தான் பிறந்ததில் இருந்தே சொந்த வீட்டில் தான் வாழ்ந்து வந்தேன் எனவும் தற்போது வாடகை வீட்டில் இருக்கிறேன் என உருக்கமாக கூறி இருக்கிறார்.

ரவி மோகன் ஆர்த்தி மற்றும் குழந்தைகள் உடன் வாழ்ந்து வந்த வீட்டை விட்டு வெளியேறியது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதை பற்றி தான் ரவி மோகன் மறைமுகமாக இப்படி பேசி இருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *