தனுஷின் "இட்லி கடை" ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

தனுஷின் "இட்லி கடை" ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்


சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகை நித்யாமேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில், “நித்யா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண் ஆகிய நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையவில்லை. இன்னும் 10 சதவீத படப்பிடிப்புகள் மீதம் உள்ளது. நல்ல படத்தை அவசர அவசரமாக வெளியிட வேண்டாம் என நினைக்கிறோம். எனவே விரைவில் இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓ.டி.டி பிசினஸ் மிகவும் மந்தமாக இருந்த நிலையில், முன்னணி நடிகர்களின் சில படங்களுக்கே ஓ.டி.டிபிசினஸ் எளிதாக அமையவில்லை. ஆனால், இந்நிலையில் தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.45 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *