4 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்


baththa movie 4 days box office collection: பத்தா திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.


பத்தா


நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி தரணீதரன். இதன்பின், சீதக்காதி, ஒரு பக்க கதை போன்ற படங்களை இயக்கினார். ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பு பெறவில்லை.

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் | Baththa Movie 4 Days Box Office Collection

இந்த நிலையில், இவர் இயக்கத்தில் நான்காவதாக உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் பத்தா. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சீதக்காதி படங்களை தொடர்ந்து இப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக இவர்களுடைய கூட்டணி இப்படத்தில் இணைந்ததால், எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் | Baththa Movie 4 Days Box Office Collection

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ், சாய், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வந்த பத்தா படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என பலரும் பாராட்டி வருகிறார்கள்.


பாக்ஸ் ஆபிஸ்


இந்த நிலையில், பத்தா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 4 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் பத்தா திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல் | Baththa Movie 4 Days Box Office Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *