11 நாட்களில் ‘ஹாய்’ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்


தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘ஹாய்’ திரைப்படத்தின் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



‘ஹாய்’


ரொமான்டிக் – காமெடி என்பது சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜானர்களில் ஒன்றாகும். அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஹாய் திரைப்படம்.

11 நாட்களில்

அறிமுக இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடைய ஜோடியை திரையில் பார்ப்பதே மிகவும் புதியதாக இருந்தது.

11 நாட்களில்



பாக்ஸ் ஆபிஸ்



‘ஹாய்’ திரைப்படம் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை, வெளிவந்த நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில், 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ‘ஹாய்’ திரைப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

11 நாட்களில்



அதன்படி, 11 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *