ரேவதியின் உறவே வேண்டாம்.. அதிரடி முடிவு எடுத்த சாமுண்டீஸ்வரி- கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்
திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்.
நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி அனுப்பிய சட்ட நோட்டீஸை பார்த்து கார்த்திக் அதிர்ச்சியடைந்த நிலையில், இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
நோட்டீஸை கையில் எடுத்துக்கொண்டு நேராக சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வரும் கார்த்திக், “இது என்ன?” என்று கேள்வி கேட்கிறார்.
அப்போது சந்திரகலா அந்த நோட்டீஸை வாங்கி வீட்டில் இருந்த அனைவரின் முன்னிலையிலும் வாசித்துக் காட்டுகிறார்.
அதில், சாமுண்டீஸ்வரி தனக்கும் ரேவதிக்கும் இனி எந்த உறவும் இல்லை என்று சட்டப்படி நடவடிக்கை எடுத்திருப்பது தெரியவருகிறது.
இதைக் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.
ஆனால், இந்த விஷயம் எப்படியும் ரேவதிக்கு தெரியக்கூடாது என்று கார்த்திக் முடிவு செய்கிறார். இருந்தாலும் அவர் நினைத்தது போல நடக்கவில்லை.
எதிர்பாராதவிதமாக ரோகிணி, ரேவதியிடம் உண்மையை சொல்லிவிடுகிறார்.
இதனால் மனவேதனையில் ஆழும் ரேவதி, சாமுண்டீஸ்வரியை நேரில் சந்தித்து, “நாளைக்கு வந்து தேவையான இடத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
அதே நேரத்தில், இவ்வளவு பெரிய விஷயத்தை கார்த்திக் தன்னிடம் மறைத்துவிட்டாரே என்ற வருத்தமும் ரேவதியின் மனதில் ஆழமாக பதிகிறது.
சாமுண்டீஸ்வரியின் இந்த முடிவு ரேவதியின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? கார்த்திக் மற்றும் ரேவதி இடையே உருவாகும் இந்த விரிசல் அடுத்து என்ன திருப்பத்தை கொடுக்கப் போகிறது? என்பதை தெரிந்துகொள்ள இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடை தவறாமல் பாருங்கள்.
