மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட கிங் திரைப்படம்.. மாஸ் காட்டும் ஷாருக்கான்
King Movie Overseas rights: ஷாருக்கான் நடிப்பில் உருவாகி டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் கிங் திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமம் விற்பனை தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
கிங்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கிங். இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அனில் கபூர் என பாலிவுட் திரையுலகின் பல உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
வெளிநாட்டு உரிமை
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, அப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம், வியாபார விவரம் ஆகியவை இணையத்தில் வெளியாகும். இந்த நிலையில், கிங் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கிங் திரைப்படத்தை Phars Film நிறுவனம் ரூ. 175 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இப்படம் தனது முதலீட்டை ஈடுகட்ட சுமார் 45 மில்லியன் டாலர் வருமானம் ஈட்ட வேண்டியிருக்கும்.
