பைனான்சியர் பிரச்சனைக்கு முத்துவிற்கு கிடைத்த உதவி… சிறகடிக்க ஆசை எபிசோட்

பைனான்சியர் பிரச்சனைக்கு முத்துவிற்கு கிடைத்த உதவி… சிறகடிக்க ஆசை எபிசோட்

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் கடைக்கு சென்று விஜயாவை தங்களது வீட்டிற்கு அழைக்கிறார்கள் முத்து-மீனா.

அண்ணாமலையும் இங்கே எந்த வசதியும் இல்லை, ஒழுங்காக வீட்டிற்கு வா என்கிறார். மீனாவும் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பார்த்து பார்த்து நான் செய்கிறேன் என மீனாவும் கெஞ்சுகிறார். 

மனோஜும், விஜயா இங்கிருந்து சென்றால் ரோஹினி இங்கே வர முடியும் என ஏதேதோ கூறி அவரை அனுப்பிவிடுகிறார். விஜயா எல்லோரும் கேட்டதால் மீனா அம்மா விட்டிற்கு செல்ல ஒப்புக்கொள்கிறார்.

பைனான்சியர் பிரச்சனைக்கு முத்துவிற்கு கிடைத்த உதவி... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial May 15 Episode

முக்கிய விஷயம் 

மீனா வீட்டிற்கு சென்ற விஜயா வழக்கம் போல் அவர்களை கஷ்டப்படுத்தும் வகையில் பேசுகிறார். அப்போது முத்து-மீனா ஆங்கிலம் கற்கும் விஷயம் கேள்விப்பட்டு கேலி செய்கிறார்.

அடுத்து ரவி-ஸ்ருதி வீட்டிற்கு வந்து அங்கே நடந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்கிறார்கள்.

பைனான்சியர் பிரச்சனைக்கு முத்துவிற்கு கிடைத்த உதவி... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial May 15 Episode

பின் முத்து ஆங்கிலம் கற்கும் இடத்திற்கு செல்கிறார், அங்கு முத்துவின் வீட்டு விஷயத்திற்கு ஒரு உதவி கிடைக்கிறது. அங்கு ஆங்கிலம் படிக்க வந்தவர் ஒருவர் முத்துவிடம் ஜாலியாக பேசுகிறார்.

அப்போது முத்து வீட்டில் நடந்த விஷயத்தை அவரிடம் பகிர்கிறார், அப்போது அவர் சொன்ன விஷயத்தை கேட்டு முத்து சந்தோஷப்படுகிறார். அதாவது அவர் வருமான வரித்துறை அதிகாரியாம், அவர் பைனான்சியர் வீட்டிற்கு ரெய்டு போகலாம், கருப்பு பணம் என்று தான் நினைக்கிறேன் என்கிறார்.

பைனான்சியர் பிரச்சனைக்கு முத்துவிற்கு கிடைத்த உதவி... சிறகடிக்க ஆசை எபிசோட் | Siragadikka Aasai Serial May 15 Episode

பைனான்சியர் குறித்து நான் விசாரிக்கிறேன், உதவி செய்கிறேன் என்கிறார். அவரின் பேச்சைக் கேட்டு முத்து வீட்டை மீட்டுவிடலாம் என சந்தோஷப்படுகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *