பிளாஸ்ட் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா?

பிளாஸ்ட்
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட்.
இப்படத்தில் அர்ஜுடனுடன் இணைந்து அபிராமி பல ஆண்டுகளுக்கு பின் நடித்திருந்தார். மேலும், இளம் சென்சேஷனல் நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஆக்ஷன் ஹீரோயினாக இப்படத்தில் கலக்கியிருந்தார்.
கடந்த மே 28-ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூட, முதல் நாளிலிருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வந்தது பிளாஸ்ட்.
இறுதி வசூல்
இந்த நிலையில், பிளாஸ்ட் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 80 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் மாபெரும் லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






