பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட கென் கருணாஸ் யூத் படத்தின் OTT ரிலீஸ் எப்போது?… இதோ விவரம்

கென் கருணாஸ்
தமிழ் சினிமாவில் 2026 தொடங்கியது முதல் பெரிய படங்கள் அவ்வளவாக ரிலீஸ் ஆகவில்லை.
ஆனால் சின்ன பட்ஜெட்டில் இளம் கலைஞர்கள் நடித்த நிறைய படங்கள் வெளியாகியுள்ளது, நல்ல விமர்சனங்களையும் பெற்று ஹிட்டாகியிருக்கிறது.
அப்படி சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ஒரு படம் பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் கென் கருணாஸ். இவர் அசுரன், விடுதலை 2, வாத்தி உள்ளிட்ட படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தையும் பெற்றார்.
யூத் படம்
இப்போது கென் கருணாஸ், யூத் என்ற படத்தை இயக்கி அதில் நடித்தும் உள்ளார். கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் வருகிற ஏப்ரல் 16ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.






