சின்னஞ்சிறு கிளியே சீரியல் அப்டேட்: அதிரடி சண்டையில் இறங்கிய கர்ணா…


சின்னஞ்சிறு கிளியே

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சின்னஞ்சிறு கிளியே’ சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், கார்த்திக்காக சண்டைக்குச் சென்ற கர்ணாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

சின்னஞ்சிறு கிளியே சீரியல் அப்டேட்: அதிரடி சண்டையில் இறங்கிய கர்ணா... கடைசியில் கர்ணாவை உலுக்கிய சாபம்! | Chinnanjiru Kiliye Serial Latest Episode



தீபாவிடம் மன்னிப்புக் கேட்ட கார்த்திக்!




கடன் பிரச்சினையில் அடி வாங்கிவிட்டு வீட்டுக்கு வரும் கார்த்திக்கும் தீபாவும் நடந்ததை நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது, “நல்லவேளை இந்த விஷயம் கர்ணாவுக்குத் தெரியல” என்று கார்த்திக் நிம்மதியாகச் சொல்கிறான்.


தொடர்ந்து தீபாவிடம், “என்னாலதான் உன்னை அடிச்சாங்க தீபா. என் கோபத்தையெல்லாம் உன் மேல காட்டிட்டான். என்னை மன்னிச்சிடு” என்று வருத்தப்படுகிறான்.



அந்த நேரத்தில் அங்கு வரும் கர்ணா, “யாரு உன்னை அடிச்சது?” என்று கேட்கிறான். இதனால் அதிர்ச்சியடையும் கார்த்திக், சேகர் என்பவரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால், அவன் தன்னையும் தீபாவையும் அடித்துவிட்டதாகச் சொல்கிறான்.



சேகரின் ஆட்களை அடித்து துவம்சம் செய்த கர்ணா!



இதைக் கேட்டதும் கர்ணாவுக்குக் கோபம் வருகிறது. உடனே சேகரைத் தேடி அவனது இடத்துக்குச் செல்கிறான்.

அங்கே ஏற்கெனவே ஒரு தம்பதியினர் கடன் பிரச்சினையில் சிக்கி, எங்களை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.


அவர்களைப் பார்த்த கர்ணா, சேகரையும் அவனது ஆட்களையும் எதிர்த்துச் சண்டை போடுகிறான். ஒரு கட்டத்தில் அனைவரையும் அடித்து துவம்சம் செய்து, அந்தத் தம்பதியைக் காப்பாற்றுகிறான்.



இதையடுத்து, கர்ணாவிடம் அடிவாங்கிய சேகரின் ஆட்களைப் பார்த்த அந்தத் தம்பதி, “எங்களைக் காப்பாத்த சாமியே நேர்ல வந்துட்டாரு” என்று நிம்மதியடைகிறார்கள்.



கர்ணாவை நிலைகுலைய வைத்த சாபம்!



அப்போது அந்தக் குடும்பத் தலைவர் சேகரிடம், “உன்னை மாதிரியே கிருபான்னு ஒருத்தன் இருக்கான்.

அவன்கிட்ட என் நண்பன் கடன் வாங்கினான். அதுக்கு வட்டிக்கு மேல வட்டி கேட்டு அவனை ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. கடைசியில் அவன் செத்தே போயிட்டான். அந்த கிருபாகிட்ட கடன் வாங்கக் கூடாதுன்னுதான் உன்கிட்ட வந்தேன். நீயும் இப்படிப் பண்ணிட்டியே! நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்கடா. அனாதைப் பிணமாத்தான் சாவீங்க” என்று சாபமிடுகிறார்.


அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட கர்ணா அதிர்ச்சியில் உறைந்து போகிறான். குறிப்பாக, அனாதையாகச் சாவீர்கள் என்று அவர் விட்ட சாபம் கர்ணாவின் மனதை ரொம்பவே பாதிக்கிறது.



சித்ராவுக்கு வந்த போன் கால்…ஜெயந்தி செய்த கலாட்டா!



இதற்கிடையில், கர்ணாவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படும் இந்து, சாமியிடம் கண்ணீருடன் வேண்டிக் கொண்டிருக்கிறாள்.


மறுபக்கம், இரவு நேரத்தில் சித்ரா, ஜெயந்தி, சுகுணா மூவரும் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது சித்ராவின் போனுக்கு பாஸ்கர் என்பவரிடமிருந்து கால் வருகிறது.

இதைப் பார்த்த ஜெயந்தி, “யாரு இந்த பாஸ்கர்… ராஸ்கலா?” என்று கிண்டல் செய்கிறாள்.


உடனே இந்து, “பாஸ்கர் நம்ம முன்னாடி இருந்த வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பையன். ரொம்ப நல்லவன். எனக்குத் தங்கச்சி இருந்தா அவனுக்குத்தான் கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்” என்று சொல்கிறாள்.


இதைக் கேட்டதும் ஜெயந்தி, சித்ராவைக் கலாய்க்க ஆரம்பிக்கிறாள். இதனால் கடுப்பாகும் சுகுணா, “சித்ரா, நம்ம குடும்பத்துக்கு இந்தக் காதல், கத்திரிக்காயெல்லாம் சரிப்பட்டு வராது. ஆம்பளைப் பசங்க சகவாசமே வேண்டாம்” என்று எச்சரிக்கிறார்.



அதற்கு சித்ரா, “அவன் எனக்கு வெறும் ஃபிரெண்ட்தான். ஃபிரெண்டா கூட பேசக்கூடாதா?” என்று கேட்கிறாள். ஆனால் சுகுணாவோ, “அப்படியெல்லாம் எதுவும் வேண்டாம். உங்க அப்பாவைப் பத்தி உனக்குத் தெரியும்ல?” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார்.



கர்ணாவிடம் கோபப்பட்ட இந்து… அமைதியாக இருந்த கர்ணா!



ஒருபக்கம், சாபத்தைக் கேட்டதிலிருந்து மனக்குழப்பத்தில் இருக்கும் கர்ணா, இந்து பரிமாறிய சாப்பாட்டைக்கூடச் சாப்பிடாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். அவன் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இந்து, “ஏன் சாப்பிடாம இருக்க?” என்று கேட்டு அவனைத் தொடுகிறாள்.



அப்போது கர்ணாவுக்கு அடிபட்ட இடத்தில் இந்துவின் கை பட்டுவிட, வலியால் அவன் கத்துகிறான். இதைப் பார்த்த இந்து அதிர்ச்சியடைகிறாள். கர்ணாவுக்கு அடிபட்டிருப்பதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் வருகிறது.


“என் மேல சத்தியம் பண்ணிட்டுத் திரும்பவும் சண்டைக்குப் போனியா? எப்படி அடிபட்டுச்சு? உங்க அண்ணன் சண்டைக்குப் போகச் சொன்னாரா? அவருக்காகத்தான் அடி வாங்கினியா?” என்று இந்து கோபமாகக் கேட்கிறாள்.



ஆனால், ஏற்கெனவே அந்தச் சாபத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் கர்ணாவால் எதுவும் பேச முடியவில்லை. இந்துவிடம் நடந்ததைச் சொல்லவும் முடியாமல், அமைதியாக முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.



இப்படிக் கர்ணா சாபத்தால் மனக்குழப்பத்தில் இருக்க, இந்து அவன் மீது கோபத்தில் இருக்கிறாள். இந்தச் சூழலில் கர்ணா என்ன செய்யப் போகிறான்?

இந்துவிடம் நடந்த உண்மையைச் சொல்வானா? கர்ணாவை உலுக்கிய அந்தச் சாபம் அடுத்து என்ன பிரச்சினையைக் கொண்டு வரப்போகிறது? என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *