குழந்தை பெற்றெடுப்பதில் மீனாவிற்கு ஏற்பட்ட சிக்கல்.. அதிர்ச்சியில் முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல்

குழந்தை பெற்றெடுப்பதில் மீனாவிற்கு ஏற்பட்ட சிக்கல்.. அதிர்ச்சியில் முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல்

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

மருத்துவமனையில் மீனா

மீனாவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட, அவரை உடனடியாக ஸ்வேதா மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். மீனா மருத்துவமனைக்கு சென்றுள்ள விஷயத்தை அறிந்து முத்துவும் அங்கு வருகிறார்.

குழந்தை பெற்றெடுப்பதில் மீனாவிற்கு ஏற்பட்ட சிக்கல்.. அதிர்ச்சியில் முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் | Meena Trouble To Get Pregnant Siragadikka Aasai

அதிர்ச்சி செய்தி

மீனாவை மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு, அவரால் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளது என கூறுகிறார். மீனாவின் கர்ப்பப்பையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் அவரால் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என மருத்துவர் கூற, முத்துவும் மீனாவும் மனமுடைந்து போய் அழுகிறார்கள்.

குழந்தை பெற்றெடுப்பதில் மீனாவிற்கு ஏற்பட்ட சிக்கல்.. அதிர்ச்சியில் முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் | Meena Trouble To Get Pregnant Siragadikka Aasai

மேலும், இந்த பிரச்சனையை சரி செய்யலாம், அதற்கான சிறப்பு மருத்துவர் அடுத்த வாரம் மும்பையில் இருந்து இங்கு வருகிறார். அவர் இதுபோன்ற பல இக்கட்டான பிரச்சனைகளை சரிசெய்துள்ளார். அவரிடம் அப்பாயின்மென்ட் (appointment) வாங்கி தருகிறேன் என வந்த மருத்துவர் கூறுகிறார்.

குழந்தை பெற்றெடுப்பதில் மீனாவிற்கு ஏற்பட்ட சிக்கல்.. அதிர்ச்சியில் முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் | Meena Trouble To Get Pregnant Siragadikka Aasai

மருத்துவமனையில் இருந்து முத்துவும் மீனாவும் வெளியே வருவதை விஜயா பார்த்துவிடுகிறார். உடனடியாக மீனாவின் தங்கையிடம் சென்று, ‘எதற்காக மீனா இங்கு வந்தாள்?’ என கேட்கிறார். அதற்கு மீனாவின் தங்கை ‘அக்காவுக்கு வயிற்று வலி அதனால் தான் வந்தாள்’ என கூறுகிறார். ஆனாலும், அதை விஜயா நம்பவில்லை.

நாளை

ரோகிணியை விவாகரத்து செய்யத்தான் இரண்டாம் திருமணமே செய்துகொண்டார் மனோஜ். அப்போது தான் ரூ. 5 லட்சம் கிடைக்கும், அதை வைத்து ரோகிணியை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடவைக்க முடியும் என காத்திருந்தார்.

அதன்படி தற்போது மனோஜுக்கு ரூ. 5 லட்சம் கிடைத்துவிட்டது.

குழந்தை பெற்றெடுப்பதில் மீனாவிற்கு ஏற்பட்ட சிக்கல்.. அதிர்ச்சியில் முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் | Meena Trouble To Get Pregnant Siragadikka Aasai

இதன்பின், ரோகிணிக்கு போன் கால் செய்து, பணத்தை ஏற்பாடு செய்துவிட்டேன், உடனடியாக வந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு என மனோஜ் கூறுகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *