இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு…
சினேகா
கடந்த 2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்ஙனே ஒரு நிலாப்பக்ஷி என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா.
அடுத்து தமிழில் என்னவளே திரைப்படத்தில் என்ட்ரி கொடுத்தவர் ஆனந்தம், உன்னை நினைத்து, ஆட்டோகிராஃப், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என தொடர்ந்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்தார்.
தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தவர் கடந்த 2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் மலர்ந்தது.
இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2012ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு நடிகை சினேகா படங்கள் நடிக்க துவங்கியுள்ளார், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.
சொத்து மதிப்பு
தமிழ் சினிமா ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படும் நடிகை சினேகா, Snehalayam என்ற புடவை தொழிலையும் செய்து வருகிறார்.
இன்று நடிகை சினேகா தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், சொந்த தொழில் என பிஸியாக பணிபுரியும் சினேகாவின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
