அத்தனை தடைகளையும் தாண்டி இன்றும் குறையாத டோரதி வசூல்
டோரதி
டோரதி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து இன்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் வருவதற்கு முன்பே விமர்சனம் என்ற பெயரில் பலரும் பல அவதூறு கருத்துகளை பதிவு செய்தனர்.
வசூல்
ஆனால், படத்தை பார்த்த ஆடியன்ஸ், ‘அட நல்லாருக்கு, இந்த படத்தை ஏன்பா குறை சொல்றீங்க’ என பாசிட்டிவ் விமர்சனங்களை சொல்ல நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் வந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 3 வாரங்கள் கடந்த நிலையில், உலகம் முழுவதும் 17.5 கோடி வசூலை தாண்டி இந்த படம் ஹிட் வரிசையில் இடம் பெற்றுள்ளது.
