சிம்புவின் “அரசன்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

சிம்புவின் “அரசன்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்


அனிருத் இசையமைக்கும் சிம்புவின் ‘அரசன்’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதையுலகின் ஒரு பகுதியாக உருவாகிறது அரசன் திரைப்படம். வடசென்னை படத்தில் நடித்த சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். முதற்கட்டமாக சிம்புவின் இளம் பருவத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கோவில்பட்டியில் இன்று தொடங்கியிருக்கும் முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று வாரங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் தொடங்கும் கதை, வட சென்னை வரை வருகிறது என்றும் சொல்கிறார்கள். விளையாட்டு வீரராக அவர் கேம் ஆடும் காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பில் தான் விஜய் சேதுபதி பங்கேற்பார் என தெரிகிறது. தென்மாவட்டங்களில் சிலம்பரசனின் வருகை அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. வரும் நாட்களில் அந்தப் பகுதி ரசிகர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார் சிலம்பரசன்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *