அனுஷ்காவின் ஆக்சன் படமான ''காதி'' ஓடிடியில் வெளியானது

சென்னை,
அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் “காதி”. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கிய இந்தப் படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். போதைப்பொருள் கடத்தலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கதை நன்றாக இருந்தாலும், அதனை கிரிஷால் ஈர்க்கும் முறையில் கொடுக்க முடியவில்லை. இதன் விளைவாக படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்தப் படம் வெளியான 20 நாட்களுக்குள் ஓடிடிக்கு வந்துள்ளது. ரிலீசாகி 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட நிறுவனம் திட்டமிட்டிருந்தநிலையில், படம் எதிர்பார்த்தபடி ஓடாததால், ஓடிடிக்கு முன்கூட்டியே கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.