The Death of Robin Hood: திரை விமர்சனம்

The Death of Robin Hood: திரை விமர்சனம்


ஷீப் டிடெக்டிவ்ஸ் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஹுயூக் ஜேக்மேன் நடிப்பில் வெளியாகியுள்ள The Death of Robin Hood நம்மை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.

The Death of Robin Hood: திரை விமர்சனம் | The Death Of Robin Hood Movie Review

கதைக்களம்



1247யில் இங்கிலாந்தில் பிரபலமான கொள்ளைக்காரனான ராபின் ஹுட்டை இளம்பெண் ஒருவர் தேடிக் கண்டுபிடிக்கிறாள்.

மக்கள் சிலர் தன்னை கதாநாயகனாக சித்தரிக்கும் கதைகளை, ராபின் கடந்தகால குற்றச்செயல்களால் மறுத்துரைக்கிறார்.


ஆனால், அவரை பழிவாங்க வந்த இளம்பெண்ணை சுதாரித்துக் கொண்டு ராபின் கொன்றுவிடுகிறார். அவளின் உடலை புதைத்துவிட்டு கிளம்பும் ராபினை, அவரது சக கொள்ளையனான ஜான் சந்திக்கிறார்.

The Death of Robin Hood: திரை விமர்சனம் | The Death Of Robin Hood Movie Review

விவசாயி எட்வர்ட் என்பவரது அடையாளத்தில் வாழ்ந்து வரும் ஜான், தனது மனைவி மற்றும் நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குடும்பத்திடம் இருந்து மீட்க ராபினை அழைக்கிறார்.

இருவரும் சேர்ந்து அந்த முயற்சியில் இறங்க ஜானின் மகள் மட்டுமே காப்பாற்றப்படுகிறாள்.

அந்த சண்டையில் ஒரு சிறுவன் கொல்லப்பட, அவனது குடும்பத்தின் தலைவர் ராபினை கொல்ல களமிறங்குகிறார்.

அதன் பின்னர் ராபின் என்ன ஆனார்? அவரது வாழ்க்கையில் ஜானின் மகளினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதே மீதிக்கதை.

The Death of Robin Hood: திரை விமர்சனம் | The Death Of Robin Hood Movie Review

படம் பற்றிய அலசல்



Pig, A Quiet Place: Day One திரைப்படங்களை இயக்கிய ஜான் கிராசின்ஸ்கி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

கொடூர கொலைகளை செய்யும் ராபின் ஹூட்டின் கதையோ என்பது போல் படம் ஆரம்பிக்கிறது.



ஆனால், காட்சிகள் நகர திரைக்கதையின் வேகம் தொய்வாகிறது. ராபினின் வீச்சை விட பேச்சுதான் அதிகமாக இருப்பதால் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் படம் ரொம்பவே bore அடிக்கிறது.

என்னப்பா செஞ்ச சம்பவத்தை எல்லாம் வசனமாவே சொல்றிங்க; சீன்ல விஷுவலா காட்டுங்க என்று நாமே கேட்கும் அளவிற்கு வெறும் பேச்சுதான்.

The Death of Robin Hood: திரை விமர்சனம் | The Death Of Robin Hood Movie Review



அதே சமயம் முதல்பாதியில் கொலைகளை கொடூரமாக ராபின் செய்வது கொஞ்சம் பதற வைக்கும்.

வயதான காலத்தில் தன் தவறுகளை உணர்ந்து, உண்மைகளை ஒப்புக்கொள்ள ராபினான ஜேக்மேன் தயங்குவது, நண்பனின் மகளை பாதுகாக்க ஒரு விஷயத்தை செய்வது போன்ற விஷயங்கள் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



அதேபோல் சண்டைக்காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக ஜேக்மேன் நடித்துள்ளார். அவர் கடந்த காலத்தில் செய்த விஷயங்களை வசனங்களாகவே கூறுவதால் இரண்டாம் பாதியில் கதையுடன் ஒன்ற முடியவில்லை.

The Death of Robin Hood: திரை விமர்சனம் | The Death Of Robin Hood Movie Review

சிஸ்டர் பிரிஜிட் கதாபாத்திரத்தை ஜோடி காமெர் மிகவும் சிறப்பாக செய்துள்ளார். குடும்பத்தை இழந்ததைப் பற்றி கூறும்போதும், உண்மை தெரிந்து உடைந்து அழும்போதும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.



ஜான் கதாபாத்திரத்தில் பில் ஸ்கார்ஸ்கார்ட், நோவா ஜுப், சிறுமி ஃபைத் டெலனே, கிளிவ் ரஸஸ், ஜேட் க்ரூட் ஆகியோரும் நடிப்பில் மிரட்டியிருக்கின்றனர்.

ஜிம் ஜிஹெடியின் இசை, ஆன்ட்ரூ மொன்ட்ஷேயின் படத்தொகுப்பு மற்றும் பேட் ஸ்கோலாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

The Death of Robin Hood: திரை விமர்சனம் | The Death Of Robin Hood Movie Review

க்ளாப்ஸ்



ஹுயூக் ஜேக்மேன்


கேமரா ஒர்க்



இசை



பல்ப்ஸ்


சொதப்பலான திரைக்கதை



வசனங்கள் வழியாகவே காட்சிகளை நகர்த்தியது




மொத்தத்தில் இந்த The Death of Robin Hood பார்வையாளர்களை ஸ்லீப் பெட்டில் கொண்டு சென்றுவிட்டார்.  

The Death of Robin Hood: திரை விமர்சனம் | The Death Of Robin Hood Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *