84 வயதிலும் தனது பிட்னஸிற்கான காரணம் என்ன… டிப்ஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்…

84 வயதிலும் தனது பிட்னஸிற்கான காரணம் என்ன… டிப்ஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்…

நடிகர் சிவகுமார்

தமிழ் திரையுலகில் மூத்த கலைஞர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகுமார். நடிப்பில் இருந்த ஓய்வு பெற்றவர் ஓவியம் மற்றும் கலை சார்ந்த துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் திரைத்துறை மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டும் வருகிறார். 84 வயதாகும் சிவக்குமார் இந்த வயதிலும் ஆரோக்கியமாகவும் உற்சாகமான குரல்வளத்துடனும் இருக்கிறார்.

அப்படி இந்த வயதிலும் தனது பிட்னஸிற்கான காரணம் என்ன என்பதை பகிர்ந்துள்ளார்.

84 வயதிலும் தனது பிட்னஸிற்கான காரணம் என்ன... டிப்ஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்... | Actor Sivakumar Shares His Fitness Secret

பிட்னஸ் சீக்ரெட்

நான் பின்பற்றம் உடல் சார்ந்த நலன்கள் என்றால் வாக்கிங் மற்றும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஆகியவற்றைத்தான்.

தினமும் 2 லிட்டராவது தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலிலுள்ள எல்லா நச்சுக்களையும் வெளியேற்றிவிட முடியும். வாக்கிங் மூலம் உடல் உறுப்புகளை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்போடும் வைத்துக்கொள்ள முடியும்.

84 வயதிலும் தனது பிட்னஸிற்கான காரணம் என்ன... டிப்ஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்... | Actor Sivakumar Shares His Fitness Secret

8 முதல் 10 மணி நேரம் வரை கணினி பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்களை சிமிட்ட வேண்டும். நான் தினமும் காலை 40 – 45 நிமிடங்களுக்கு வாக்கிங் செல்வேன். ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக் கொண்டே, சட்டையில்லாமல் வீட்டு மொட்டை மாடியில் நடப்பேன்.

84 வயதிலும் தனது பிட்னஸிற்கான காரணம் என்ன... டிப்ஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்... | Actor Sivakumar Shares His Fitness Secret

இப்படி நடக்கும் போது, தோல்கள் மூலம் உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும். மேலும் வியர்வை மூலம் எல்லா நச்சும் நீங்கியும் விடும். முதுமையிலும் நான் ஆரோக்கியமாக இருக்க இதுதான் காரணம்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *