6 கோடி சம்பளம் கொடுத்தும் பிக் பாஸ் வர மறுத்த நடிகை! யார் பாருங்க

பிக் பாஸ் ஷோவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்தியாவில் பல மொழிகளில் இந்த ஷோ நடந்து வருகிறது.
அதில் கலந்துகொண்டாலே புகழின் உச்சத்திற்கு செல்லலாம் என பலரும் அதில் போட்டியாளராக வர அதிகம் முனைப்பில் இருப்பார்கள். ஆனால் வந்த வாய்ப்பை ஒரு நடிகை வேண்டாம் என நிராகரித்து இருக்கிறார்.
6 கோடி சம்பளம் வேண்டாம்
ஹிந்தி பிக் பாஸ் 19ம் சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அதில் போட்டியாளராக வருவதற்கு நடிகை Elnaaz Norouziயிடம் பேசி இருக்கிறார்கள். அவருக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் சொல்லி இருக்கின்றனர்.
ஆனாலும் வர முடியாது என அவர் மறுத்துவிட்டார். Sacred Games சீரிஸ், Hello Charlie படம், ஹாலிவுட்டில் Kandahar படம் போன்றவற்றில் அவர் நடித்து இருக்கிறார்.
எனக்கு quality of work தான் முக்கியம், பணம் முக்கியம் இல்லை என சொல்லி சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸுக்கு வர மறுத்துவிட்டாராம்.