12 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்..

ஒவ்வொரு நாளும் ஜனநாயகன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது பற்றிய விவரத்தை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 12 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன்
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. பல தடைகளை தாண்டி வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். முன்னணி நடிகைகளாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி தியோல் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்.
12 நாட்கள் வசூல் விவரம்
விஜய்யின் திரைப்படம் என்றாலே விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது உச்சத்தை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதேபோல் ஜனநாயகன் திரைப்படமும் கலவையான விமர்சனத்தை சந்தித்தது. இருந்தும் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள ஜனநாயகன் உலகளவில் ரூ. 293 கோடி வரை வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






