விஜய்யை தொடர்ந்து ரஜினியும் எடுத்த முடிவு.. இது தான் கடைசி படமா?

விஜய்யை தொடர்ந்து ரஜினியும் எடுத்த முடிவு.. இது தான் கடைசி படமா?


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 74 வயதிலும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்தடுத்து அவர் படங்கள் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அவர் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். கலகலப்பாக படம் எடுக்கும் இயக்குனர் உடன் ரஜினி கூட்டணி சேர்ந்து இருப்பதால் ரசிகர்களும் அந்த படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர்.

விஜய்யை தொடர்ந்து ரஜினியும் எடுத்த முடிவு.. இது தான் கடைசி படமா? | Is Rajinikanth Retiring From Films After This

பரவும் செய்தி

சுந்தர் சி படத்தை முடித்தபிறகு ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி சேர்கிறார். ரஜினி – கமல் கூட்டணி சேர்ந்து நடிக்க போகும் படம் தான் அது.

அந்த படத்தை முடித்துவிட்டு ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து இருப்பதாக தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இந்த தகவல் பற்றி ரஜினி தரப்பு எந்த விளக்கம் இன்னும் கொடுக்கவில்லை.

ஏற்கனவே விஜய் அரசியலுக்காக சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்ட நிலையில், தற்போது ரஜினியும் ஓய்வு பெறுவதாக பரவும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *