விசாலாட்சிக்கு வந்த ஷாக்கிங் போன் கால், அடுத்து நடக்கப்போவது?… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
குணசேகரன் நினைத்தது போல் சாமிக்கு கட்டுகட்டும் விஷயம் நடக்குமா அல்லது ஜெயிலுக்கு செல்வாரா என தெரியவில்லை. இன்னொரு பக்கம் சக்தி தேடிவந்த நபரை மீட்பாரா அல்லது ராவணனிடம் சிக்குவாரா என தெரியவில்லை.
இதற்கு இடையில் சிங்கப்பூர் சென்ற விசாலாட்சி வீட்டிற்கு வந்தவுடன் அவரிடம் தேவகி மகன் பற்றிய உண்மையை நந்தினி கூற அவர் ஒருபக்கம் பதற்றத்தில் உள்ளார்.
இயக்குனர் எப்போது ஒரு பிரச்சனையை முடித்த அடுத்த பிரச்சனை செல்வார் என தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பிரச்சனையாகவே உள்ளது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், விசாலாட்சிக்கு அவரத சகோதரர் போன் செய்கிறார். இந்த பூஜையை மட்டும் அவன் செய்துவிட்டால் ஒன்றில்லை 2 உயிர் போகும் என கூற அவர் செம ஷாக் ஆகிறார்.
அடுத்து குணசேகரனை பிடிக்க போலீசார் அவர் இருக்கும் வீட்டிற்கே வர அறிவுக்கரசியும் ஷாக் ஆகிறார். இன்னொரு பக்கம் ஜனனி, சக்திக்கு போன் செய்து அத்தை வந்துவிட்டார்கள், உன்னை வீட்டிற்கு வர சொன்னார்கள் என்கிறார்.
