ரோஹினியை பழிவாங்க படி அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?… சிறகடிக்க ஆசை சீரியல்

ரோஹினியை பழிவாங்க படி அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?… சிறகடிக்க ஆசை சீரியல்


சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை.

கதையில் மனோஜ்-ரோஹினி விவாகரத்து நடக்குமா இல்லையா என்ற கேள்விக்குறியாக தொடரின் கதை செல்கிறது.
இதற்கு இடையில் சிந்தாமணி போட்ட பிளானால் மீனா அண்ணாமலை வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

மீனா வீட்டில் இல்லாததால் விஜயா மட்டும் சந்தோஷமாக இருந்தார், ஆனால் விஜயா நம்பிய ஜோசியக்காரர் ஒரு திருடி என்ற உண்மை வெளியாக மீனா மீண்டும் அண்ணாமலை வீட்டிற்குள் வந்துவிட்டார்.

எபிசோட்


இன்றைய எபிசோடில், மீனா வீட்டிற்குள் வந்ததால் அண்ணாமலை ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறார். அதற்காக வீட்டிற்கு மீனா குடும்பம், ஸ்ருதி, பரசு, பார்வதி என குடும்பத்திற்கு வேண்டியவர்கள் அனைவரும் வருகிறார்கள்.

அந்த நேரத்தில் வீட்டிற்கு முத்து-மீனாவை தேடி போலீஸ் வருகிறார்கள். அதாவது அவர்கள் கொடுத்த நகையில் ஒரு ஜோடியின் நகையும் இருந்ததால் அதனை திருப்பி கொடுத்ததற்காக முத்து-மீனாவிற்கு அந்த ஜோடி ஒரு நகை வாங்கிவந்து கொடுத்துள்ளார்கள்.

ரோஹினியை பழிவாங்க படி அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 27 Episode

பின் வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்க விஜயா மற்றும் மனோஜ் செம கோபத்தில் உள்ளனர். தனது இந்த நிலைமைக்கு அந்த ரோஹினி தான் காரணம் என விஜயா கோபப்பட மனோஜ் நான் ஒரு பிளான் போட்டுள்ளேன் என ரோஹினிக்கு போன் செய்கிறார்.

ரோஹினியை பழிவாங்க படி அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial March 27 Episode

உன்னிடம் பேச வேண்டும் என ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு மனோஜ் போன் செய்வதால் சந்தோஷத்தில் ரோஹினியும் கிளம்புகிறார். இந்த முறை மனோஜ் போட்டுள்ள வலையில் ரோஹினி சிக்குவாரா இல்லையா என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *