ரூ.112 கோடி கேட்டாங்க.. LIK சர்ச்சை பற்றி பேசிய விக்னேஷ் சிவன்

ரூ.112 கோடி கேட்டாங்க.. LIK சர்ச்சை பற்றி பேசிய விக்னேஷ் சிவன்


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் LIK படம் ரிலீஸ் ஆனது. நீண்ட காலதாமதத்திற்கு பிறகு படம் ரிலீஸ் ஆகி இருந்த நிலையில் ரசிகர்களிடம் கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து வருகிறது.

பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தி நடித்திருக்கின்றனர்.

ரூ.112 கோடி கேட்டாங்க.. LIK சர்ச்சை பற்றி பேசிய விக்னேஷ் சிவன் | Vignesh Shivan On Using Lik Title Instead Of Lic

டைட்டில் சர்ச்சை

LIK படத்திற்கு முதலில் LIC என்று தான் டைட்டில் வைத்து இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அது தங்கள் பெயரை கெடுப்பது போல இருப்பதாக LIC நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு தான் டைட்டிலை Love Insurance Kompany (LIK) என மாற்றினார்கள்.

அது பற்றி தற்போது பேசி இருக்கும் விக்னேஷ் சிவன் “LIC என்ற டைட்டிலை பயன்படுத்த 112 கோடி ரூபாய் கேட்டார்கள். என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. அதனால் பேக்அப் ஆக LIP, LIT, LIK, LIF போன்ற தலைப்புகளை வைத்திருந்தேன். அதில் LIK என்ற டைட்டிலை பயன்படுத்தினேன்” என கூறி இருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *