ரீ-ரிலீஸாகியுள்ள கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கில்லி
இயக்குநர் தரணி – நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா ஜோடியாக நடித்திருந்தார்.
2004ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்தனர். ரீ-ரிலீஸில் இப்படம் மாபெரும் வசூல் செய்தது. இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து ரீ-ரிலீஸான படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது.
வசூல்
2024ஆம் ஆண்டை தொடர்ந்து தற்போது மீண்டும் கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், ரீ-ரிலீஸாகியுள்ள கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






