யாருக்கு ஓட்டு என குறியீடு மூலம் சொன்ன த்ரிஷா! வைரலாகும் பதிவு

நடிகர்கள் மற்றும் நடிகைகள் இன்று வாக்களிக்க வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
மேலும் அவர்கள் அணிந்து வந்த உடை, சமூக வலைதள பதிவுகள் மூலமாக எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்றும் இணையவாசிகள் பேச தொடங்கி இருக்கின்றனர்.
த்ரிஷா ஓட்டு யாருக்கு?
நடிகை த்ரிஷா வாக்களித்த போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கில்லி படத்தின் “அர்ஜுனர் வில்லு” பாடலில் வரும் விசில் உடன் பாடலையும் தனது பதிவில் போட்டிருக்கிறார் த்ரிஷா.
அதனால் அவர் விஜய்யின் தவெகவுக்கு வாக்களித்தது உறுதியாகி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.






