லேட்டஸ்ட் ரிலீஸ் நடிகர் விஷாலின் மகுடம்… ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
விஷால்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் விஷால்.
இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி, திமிரு, துப்பறிவாளன், இரும்புத்திரை போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றார்.
பல போராட்டங்களை கடந்து நடிகர் சங்க கட்டடத்தை முடிக்க உள்ளார், அதன் திறப்பு விழாவிற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
மகுடம்
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி மகுடம் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
விஷால் முதன்முறையாக இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் வசூலும் சுமாராக தான் வந்துள்ளது.
எனவே படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் வரும் செப்டம்பர் 11ம் தேதி ஜீ5 தளத்தில் படம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
