மீனாவிடம் உதவி கேட்ட ரோஹினி, மனோஜை வெளியே அனுப்பிய அண்ணாமலை… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.
அண்ணாமலை என்பவரின் குடும்பத்தை பற்றிய கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் மனோஜ்-ரோஹினி விவாகரத்து பிரச்சனை, வீட்டை அடமானம் வைத்தது, ஸ்ருதி-ரவி-நீது பிரச்சனை, அருண்-செல்வம் விபத்து தகராறு என தொடர்ந்து சீரியலில் பிரச்சனையாகவே உள்ளது.
இன்றைய எபிசோட்
ரோஹினி, க்ரிஷ், மீனா முத்து என புலம்புவதை கேட்டு கஷ்டப்படுகிறார்.
இதனால் ஸ்ருதி ரெஸ்டாரன்ட் வந்த இடத்தில் மீனாவை சந்தித்து க்ரிஷை வந்து சந்திக்க முடியுமா என உதவி கேட்கிறார். வீட்டில் அண்ணாமலை, முத்து-மீனாவை, மனோஜ் அறையை எடுத்துக்கொள்ள கூறுகிறார்.
மனோஜை வெளியே இருக்க சொன்னதால் விஜயா வாக்குவாதம் செய்கிறார், கடைசியில் அண்ணாமலை செய்தது தான் நடக்கனும் என்கிறார். அடுத்து சிந்தாமணியை விஜயா பார்வதி வீட்டில் சந்திக்கிறார்.
அப்போது வீட்டில் நடந்ததை விஜயா சிந்தாமணியிடம் கூற அவர் முதலில் மீனாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்புங்கள் என்கிறார்.






