பாலன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் சிதம்பரம்.
இவர் இயக்கத்தில் அடுத்து என்ன திரைப்படம் வெளியாகப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
பாலன் – தி பாய்
அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் பாலன் – தி பாய். இப்படத்தில் முஹம்மத் ஜினான், பர்ஹானா, ஜீன் பால் லால் ஆகியோர் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இறுதி வசூல்
இந்த நிலையில், பாலன் – தி பாய் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக ரூ. 32 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.






