பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ

விஜய் டிவி TRP
TRP ரேட்டிங் என்பது ஒவ்வொரு சீரியல்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதை வைத்துதான் அந்த சீரியல் மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு பெறுகிறது, எந்த இடத்தில் உள்ளது என்பது தெரியவரும்.
ஒவ்வொரு வாரமும் அந்தந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP ரேட்டிங் குறித்து தகவல் வெளிவரும்.
அந்த வகையில், தற்போது 2026ஆம் ஆண்டின் 15வது வாரத்தின் விஜய் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதில், எந்தெந்த சீரியல்கள் என்னென்ன இடங்களை பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.
டாப் 5 சீரியல்கள்
6.85 TRP ரேட்டிங் உடன் வழக்கம் போல் முதலிடத்தை அய்யனார் துணை சீரியல் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து 6.46 TRP ரேட்டிங் பெற்றுள்ள சிறகடிக்க ஆசை 2வது இடத்திலும், 6.19 TRP ரேட்டிங் பெற்றிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 3வது இடத்திலும் உள்ளன.
மேலும், 5.50 TRP ரேட்டிங் உடன் சின்ன மருமகள் சீரியலுக்கு 4வது இடமும், 4.75 TRP ரேட்டிங் பெற்றுள்ள அழகே அழகு சீரியல் 5வது இடமும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






