நடிக்க வரலனா, இது தான் செய்திருப்பேன்.. ரோபோ சங்கர் உடைத்த ரகசியம்!

நடிக்க வரலனா, இது தான் செய்திருப்பேன்.. ரோபோ சங்கர் உடைத்த ரகசியம்!


ரோபோ ஷங்கர்

ஸ்டாண்ட் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் பிரபலமான இவருக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில், விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் அதிகம் நடித்து வந்தார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் தான் குணமாகி மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கினார். ஆனால், திடீரென சில தினங்களுக்கு முன் ரோபோ ஷங்கர் உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார்.

அவரது மறைவுக்கு முன் சன் டிவியின் டாப் குக்கூ டூப் குக்கூ, விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

நடிக்க வரலனா, இது தான் செய்திருப்பேன்.. ரோபோ சங்கர் உடைத்த ரகசியம்! | Robo Shankar Open Talk About Cinema Entry

ரகசியம்! 

இந்நிலையில், ரோபோ டாப் குக்கூ டூப் குக்கூ நிகழ்ச்சியில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” நான் மட்டும் நடிகராக வில்லை என்றால், நிச்சயம் ஒரு பாடி பில்டராகி இருப்பேன். ஒரு தொகுப்பாளராக, மிமிக்ரி ஆர்டிஸ்டாகத்தான் வந்தேன். நடிக்க வரவில்லை என்றால், ஏதோ ஒரு டீக்கடையில் டீ ஆத்திக்கொண்டு இருந்திருப்பேன்.

இல்லை என்றால் ஏதாவது ஒரு புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராகி இருந்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.     

நடிக்க வரலனா, இது தான் செய்திருப்பேன்.. ரோபோ சங்கர் உடைத்த ரகசியம்! | Robo Shankar Open Talk About Cinema Entry   


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *