நடிகர் பிரகாஷ் ராஜின் வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு… சோகத்தில் குடும்பம்

பிரகாஷ் ராஜ்
தமிழ் சினிமாவின் செல்லமாக கொண்டாடப்படும் ஒரு நடிகர் பிரகாஷ் ராஜ்.
சிறுவயதில் மேடை நாடகங்களில் நடித்து திறமைகளை வெளிக்காட்டி வந்தவரை கே.பாலசந்தர் இவர் சரியான நடிகர் என்று சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
டூயட் என்ற தமிழ் படம் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த பிரகாஷ் ராஜின் திரைப்பயணம் குறித்து அனைவருக்குமே தெரியும்.
எந்த மொழியாக இருந்தாலும் கொடுத்த கதாபாத்திரத்தை அசால்ட்டாக நடித்து முடிப்பவர். சினிமாவில் நல்ல நடிகனாக இருந்தாலும் நிஜத்தில் நடிக்காமல் தனக்கு தோன்றிய விஷயத்தை அப்படியே தைரியமாக பேசக்கூடியவர்.
உயிரிழப்பு
தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவரது தாயார் சுவர்ணலதா, 86 வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை பிரகாஷ் ராஜ் தாயாரின் உறுதிச் சடங்கு நடக்க உள்ளது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.






