தேர்தலுக்கு முன் விஜய்யை மோசமாக தாக்கி பேசிய சேரன்.. இப்போது அடித்த பல்டி

நடிகர் விஜய்யின் தவெக தனியாக தேர்தலை சந்தித்து 108 தொகுதிகளில் வெற்றியை பெற்று இருக்கிறது. இதனால் விஜய் அடுத்து முதலமைச்சர் ஆகிறார். பெரும்பான்மை பெறுவதற்காக மற்ற காட்சிகள் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறார் விஜய்.
விஜய் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றதற்கு சினிமா துறையினர் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன் விஜய்யை மோசமாக தாக்கி பேசி வந்தார் இயக்குனர் சேரன். ஆனால் தற்போது விஜய் ஜெயித்தபின், தான் அதற்கு வருந்துவதாக பல்டி அடித்திருக்கிறார்.
வருந்துகிறேன்
சேரன் போட்டிருக்கும் பதிவில் கூறி இருப்பதாவது. “சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்.”
“உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்… எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி.”
“அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன். தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்.”
இவ்வாறு சேரன் பதிவிட்டுள்ளார்.
சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு @actorvijay , @TVKVijayHQ அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்..
உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்…… pic.twitter.com/r6Qp0o6zQX— Cheran Pandiyan (@CheranDirector) May 6, 2026






