ஜீ தமிழில் வீரா சீரியலின் மகா எபிசோட், என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்… யார் தெரியுமா?

வீரா சீரியல்
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பொழுதுபோக்கிற்காக நிறைய சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது.
ஒவ்வொரு தொடரும் ஒரு விதம், எல்லா தொலைக்காட்சியில் டிஆர்பியை பிடிக்க என்னென்னவோ செய்கிறார்கள், பார்வையாளர்களும் அதிகமாகி தான் வருகிறார்கள்.
தற்போது ஜீ தமிழின் ஒரு தொடர் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது.
என்ன ஸ்பெஷல்
ஜீ தமிழில் கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம், வீரா, இதயம் 2 என நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கும் வீரா தொடரில் இரண்டு நடிகர்கள் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க உள்ளார்களாம்.
வரும் திங்கள் வீரா சீரியல் மகா எபிசோடாக 7.30 முதல் 9 மணி வரை, 1.30 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம். அதோடு நவீன் முரளிதரன் மற்றும் யோகி ஆகியோர் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க உள்ளார்களாம்.