ஜீ தமிழின் பாரிஜாதம் சீரியலின் நேரம் மாற்றம்… எப்போது ஒளிபரப்பாகும் தெரியுமா?

ஜீ தமிழின் பாரிஜாதம் சீரியலின் நேரம் மாற்றம்… எப்போது ஒளிபரப்பாகும் தெரியுமா?


ஜீ தமிழ்

இசை என்கிற காது கேட்காத பெண்ணிற்கும் விஷால் என்ற இசையில் அதிக ஆர்வம் கொண்ட ஒரு நபருக்கு நடக்கும் திருமண வாழ்க்கை சுற்றிய கதையாக இந்த பாரிஜாதம் சீரியல் உள்ளது.

பிரபல சீரியல் நடிகை அல்யா மானசா நாயகியாக நடிக்கும் இந்த சீரியல் சில புதுமுகங்களுடன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் சீரியல் தொடங்கிய சில மாதங்களில் நாயகன் திடீரென வெளியேற இப்போது அக்ஷ்ய் கமல் நடித்து வருகிறார்.

நாளுக்கு நாள் தொடரின் கதைக்களம் விறுவிறுப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது, ரசிகர்களின் பேராதரவையும் பெற்று வருகிறது.

மாற்றம்

இந்த நேரத்தில் ஆல்யா மானசா- அக்ஷ்ய் நடிக்கும் பாரிஜாதம் சீரியல் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது திடிரென சீரியலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜுலை 13ம் தேதி திங்கட்கிழமை முதல் பாரிஜாதம் சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். நேரம் மாற்றம் செய்யப்படவுள்ள நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கலக்கலான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *