சிரஞ்சீவி உடன் 5 நிமிடம் ஆட மௌனி ராய் வாங்கிய சம்பளம்! இவ்வளவா

நாகினி சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் நடிகர் மௌனி ராய். அந்த தொடருக்கு பிறகு அவர் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
தற்போது நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் விஸ்வாம்பரா படத்தில் மௌனி ராய் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி இருக்கிறார்.
சம்பளம்
படத்தில் வரும் 5 நிமிட பாட்டுக்கு ஆடுவதற்கு மௌனி ராய் வாங்கி இருக்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. 50 லட்சம் ரூபாய் அவர் சம்பளமாக பெற்று இருக்கிறாராம்.
மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் திரிஷாவுக்கு 12 கோடி சம்பளம் என்றும் முன்பே தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.