சரிகமப நடுவர் ஸ்ரீநிவாஸின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

சரிகமப நடுவர் ஸ்ரீநிவாஸின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்


பாடகர் ஸ்ரீநிவாஸ்

இந்திய சினிமாவில் மாபெரும் பின்னணி பாடகர்களில் ஒருவர் ஸ்ரீநிவாஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் பாடியுள்ளார். 3000 பாடல்களுக்கும் மேல் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில அரசால் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சரிகமப நடுவர் ஸ்ரீநிவாஸின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Singer Srinivas Family Photo



இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சீசன் 5 வரை நடுவராக பணிபுரிந்துள்ளார். இதன்பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கினார். பாட்டு பாடும் போட்டியாளர்களுக்கு கமெண்ட்ஸ் சொல்வது மட்டுமல்லாமல், கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்வது, போட்டியாளர்களின் வாழ்க்கைக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வது போன்ற விஷயங்களை செய்வார்.

அழகிய குடும்ப புகைப்படம்

இந்த நிலையில், பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் தனது மனைவி, மகள்கள் மற்றும் மருமகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் தனது மகள்களின் திருமணம் குறித்து பாடகர் ஸ்ரீநிவாஸ் பேசியதும் வைரலாகி வருகிறது.



இதில் “என் இரு மகள்களுக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காதல் திருமணம்தான் நடந்தது. அதில் எனக்கு பேரானந்தம்தான். அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை விட ஜாதி, அந்தஸ்து, காசு என்ன சந்தோஷத்தை தரப்போகிறது” என பேசியுள்ளார்.



இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம்..

சரிகமப நடுவர் ஸ்ரீநிவாஸின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம் | Singer Srinivas Family Photo


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *