சன் டிவியில் முடிவுக்கு வரும் வினோதினி சீரியல்… எப்போது கிளைமேக்ஸ் தெரியுமா?

சன் டிவியில் முடிவுக்கு வரும் வினோதினி சீரியல்… எப்போது கிளைமேக்ஸ் தெரியுமா?


வினோதினி

ஜீ தமிழில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை தான் ஆர்த்திகா.

அந்த சீரியல் முடித்து சிறிய இடைவேளைக்குப் பிறகு ஆர்த்திகா இந்த வினோதினி தொடரில் கமிட்டானார். டைட்டில் பெயரிலேயே வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், வாழ்வில் போராடி வெற்றிபெறும் பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தொடர் ஒளிபரப்பானது.

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் விஷயங்களை எதிர்க்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற வினோதினி எவ்வாறு போராடுகிறாள் என்பதை நோக்கிய கதையாக ஒளிபரப்பாகி வந்தது.

கிளைமேக்ஸ்

ரசிகர்களின் பேராதரவை பெற்றுவந்த இந்த சீரியல் இப்போது முடிவுக்கு வரப்போகிறது. வரும் ஆகஸ்ட் 8ம் தேதி சனிக்கிழமை பகல் 1 மணிக்கு வினோதினி சீரியலின் கிளைமேக்ஸ் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *