The Mandalorian and Grogu திரை விமர்சனம்

The Mandalorian and Grogu திரை விமர்சனம்

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான திரைப்பட சீரிஸான ஸ்டார் வார்ஸில் இருந்து வெளியாகியுள்ள The Mandalorian and Grogu எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க.

Star Wars: The Mandalorian and Grogu திரை விமர்சனம் | Star Wars The Mandalorian And Grogu Review

கதைக்களம்



மாண்டலோரியனான டின் ஜாரின் (பெட்ரா பாஸ்கல்) புதிய குடியரசுக்காக bounty hunter (கூலி வேட்டைக்காரர்) ஆக வேலை பார்க்கிறார்.

ஜப்பா தி ஹட்டின் வாரிசுகளான இரட்டையர்கள், ஜப்பாவின் மகன் ராட்டாவை மீட்குமாறு புதிய குடியரசிடம் கோருகின்றனர்.


அந்த வேலை ஜாரினுக்கு கொடுக்கப்பட அவர் தனது பிள்ளைப்போல் பார்த்துக் கொள்ளும் க்ரோகு (ஏலியன்) உடன் சகாச பயணத்தைத் தொடங்குகிறார்.

ஜானு என்ற ஆதிக்க நபரின் பிடியில் சிறைக்கைதி போல் ராட்டா இருப்பதை ஜாரின் கண்டுபிடிக்கிறார்.

Star Wars: The Mandalorian and Grogu திரை விமர்சனம் | Star Wars The Mandalorian And Grogu Review

ராட்டாவை நேரில் பார்த்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார். ஆனால், ராட்டாவோ இங்குதான் நிம்மதியாக இருப்பதாக கூறி மறுக்கிறார்.

என்றாலும், விடாப்பிடியாக ராட்டாவை மீட்டுச் செல்ல ஜாரின் சண்டையில் இறங்குகிறார்.

ஒருவழியாக ராட்டாவை மீட்டு சென்றபின், ஜானுவையும் அவரது இடத்திற்கே சென்று சிறைபிடித்து வருகிறார் ஜாரின்.

அதன் பின்னர் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்க, அவருக்கு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

Star Wars: The Mandalorian and Grogu திரை விமர்சனம் | Star Wars The Mandalorian And Grogu Review

படம் பற்றிய அலசல்



அயர்ன் மேன் (1 & 2), தி ஜங்கிள் புக், தி லயன் கிங் படங்களை இயக்கிய Jon Favreau இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்டார் வார்ஸ் பிரபலமான திரைப்படம் சீரிஸாக இருந்தாலும், இந்த மண்டலோரியன் அண்ட் க்ரோகு திரைப்படத்தை பெரியவர்கள், குழந்தைகள் ரசிக்கும்படியான ஜாலியான படமாக கொடுத்துள்ளார்.



விசித்திர ஏலியன்கள் உலாவும் கிரகத்தில் மனிதர்களும் சேர்ந்து வாழ்கின்றனர். அந்த காட்சிகளை காமெடியாகவும், சீரியசாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

bounty hunter ஆக வரும் ஹீரோ பெட்ரோ முதல் பாதி வரை முகத்தை காட்டாமலேயே நடித்திருக்கிறார்.

Star Wars: The Mandalorian and Grogu திரை விமர்சனம் | Star Wars The Mandalorian And Grogu Review

அதனால் எப்போதான்பா அவரு முகத்தை காட்டுவீங்க என்று கேட்கத் தோன்றும்.

ஆரம்பத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம். குறிப்பாக ராட்டாவை மீட்க சென்று அதனுடனே சண்டையிடும் காட்சி செம.

இரண்டாம் பாதியில் கதை வேறு தளத்திற்கு நகர்ந்தாலும், குழந்தைகளுக்கான எபிசோட் போல் க்ரோகு செய்யும் வேலைகள் பெரியவர்களையும் ரசிக்க வைக்கும்.


ஏலியன் மீது பரிதாபப்படும் அளவிற்கு நேர்த்தியாக இயக்குநர் காட்சிகளை அமைத்துள்ளார். பரபர திரைக்கதை நம்மை திரையைவிட்டு கண்ணை நகர்த்தாமல் பார்த்துக் கொள்கிறது.

இப்படத்தை பார்ப்பதற்கு ஸ்டார் வார்ஸின் ஆரிஜின் கதை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது ஒரு பாசிட்டிவ் தான்.

Star Wars: The Mandalorian and Grogu திரை விமர்சனம் | Star Wars The Mandalorian And Grogu Review

பெட்ரோ பாஸ்கல் ஒரு சில காட்சிகளில் முகத்தை காட்டியிருந்தாலும் தேர்ந்த வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு அளித்த முக்கியத்துவத்தை காமெடிக்கும் கொடுத்திருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க பார்க்க முடிகிறது.



அடுத்த காட்சிக்கு நகரும்போது விண்டேஜ் முறை யுக்தியை கையாண்டதும், பின்னணி இசையும் நாஸ்டாலஜியை தரும்.

ரேச்சல் குட்லேட், டைலன் ஃபிர்ஷினின் எடிட்டிங் கச்சிதம். லுட்விக் கோரன்ஸனின் இசை, டேவிட் கிளெய்னின் ஒளிப்பதிவு சிறப்பு.

க்ளாப்ஸ்



திரைக்கதை



சண்டைக்காட்சிகள்



காமெடி

விஷுவல்ஸ்

பல்ப்ஸ்



பெரிதாக ஒன்றுமில்லை



மொத்தத்தில் இந்த Star Wars: The Mandalorian and Grogu ஜாலி ரைடு. குழந்தைகளுடன் கண்டு ரசிக்கலாம். 

Star Wars: The Mandalorian and Grogu திரை விமர்சனம் | Star Wars The Mandalorian And Grogu Review

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *